அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மத்திய அமெரிக்க பகுதிக்கு மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். புலம்பெயர் குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்கு வருகை தருவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கும் நோக்கில் அவரின் விஜயம் நடந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான குடியேற்றவாசிகள் அமெரிக்காவிற்குள் நுழைகின்றமையினால் அமெரிக்காவில் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் கௌதம்மாலா, எல்சல்வடோர், ஹொந்துராஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த குடியேற்றவாசிகளை அமெரிக்க எல்லைக்குள் பயணிப்பதை தவிர்க்குமாறு கமலாஹாரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கௌதம்மாலா ஜனாதிபதியுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றையும் கமலா ஹாரிஸ் நடத்தியுள்ளார்.
தமது நாட்டு எல்லைக்குள் வரும் குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எல்லை பாதுகாப்பு சட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கடத்தல்கள், ஊழல், கொல்லைச்சம்பங்கள் என்பவற்றுக்கு எதிரான புதிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கௌதம்மாலாவின் வடக்கு மற்றும் தென் எல்லைகளில் குடியேற்றவாசிகளை தடுப்பதற்கான புதிய திட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் கமலா ஹாரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.