Home இலங்கை மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்ட கஜேந்திரன்

மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்ட கஜேந்திரன்

by Jey

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நாட்டை ஆண்டவர்கள் சர்வதேச விசாரணையை கேட்கின்றார்கள், ஆனால் தமிழர்கள் மீதான இனப்படுகொலை விடயத்தில் மாறிமாறி ஆட்சியில் இருந்து மறுத்து வந்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ஈஸ்டர் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூட சர்வதேச விசாரணை தேவையென கேட்டிருக்கின்றார்.

அவர்கள் இந்த நாட்டை ஆளுகின்றவர்களாக அல்லது ஆட்சி அதிகாரம் வலிமை மிக்கவர்களாக இருக்கின்ற போது தங்களுக்கு அந்த விடயங்களை கண்டறிவதற்கு சர்வதேச விசாரணை வேண்டும் என கோருகின்றார்கள்.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் என வருகின்ற போது நீதியான விசாரணை தேவை என அதிக பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரக்கூடிய சூழல் இருக்கிறது.

 

related posts