Home உலகம் புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தம் ரஷியாவுக்கே பலன் தரும்

புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தம் ரஷியாவுக்கே பலன் தரும்

by Jey

ரஷியாவின் துறைமுக நகரான விளாடிவோஸ்டக்கில் 8-வது கிழக்கு பொருளாதார கூட்டமைப்புக்கான நிகழ்ச்சி ஒன்று நடந்தது. இதில் அதிபர் புதின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசும்போது, புதிய பொருளாதார வழித்தடம் உருவாக்கத்திற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியன், சவுதி அரேபியா மற்றும் இந்தியாவுடன் கடைசியாக அமெரிக்காவும் இணைந்துள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு பெரிய அளவில் பயன் ஏற்படும் என நான் பார்க்கவில்லை.

இதேபோன்று, எங்களுடைய வடக்கு-தெற்கு திட்டத்துடன் கூடுதலாக, இந்த வழித்தடம் வழியே கூடுதல் சரக்கு போக்குவரத்து இயக்கம் நடைபெறும். இதில் எங்களுக்கு தடை ஏற்படுத்த கூடிய விசயம் என எதனையும் நான் பார்க்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆனால், இந்த திட்டம் ரஷியாவுக்கே பலன் தரும். இந்திய-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார வழித்தடம் (ஐ.எம்.இ.சி.) திட்டம், ரஷியாவின் தளவாட போக்குவரத்துக்கான வளர்ச்சிக்கு உதவும். இந்த திட்டம் பல்வேறு ஆண்டுகளாக ஆலோசனையில் இருந்து வந்தது என்று கூறியுள்ளார்.

related posts