Home உலகம் லிபியா புயலை அடுத்து – 3 நாட்கள் தேசிய துக்க தினம்

லிபியா புயலை அடுத்து – 3 நாட்கள் தேசிய துக்க தினம்

by Jey

லிபியா புயலை அடுத்து அங்கு உயிரிழவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய அடுத்த 3 நாட்களுக்கு தேசிய கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

லிபியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கிய டேனியல் சூறாவளியில் சுமார் 2 ஆயிரத்து 300 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.

டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னாவில் இரண்டு நீர்த்தேக்கங்களும் நான்கு பாலங்களும் உடைந்து நகரின் பெரும்பகுதி நீரில் மூழ்கின.

மேலும் இந்த அனர்த்தத்தில் சுமார் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

related posts