மியான்மருக்கு வருகை தரும் சீன மற்றும் இந்திய சுற்றுலாப் பயணிகள், வருகையின் போது விசா வழங்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
வெளிநாட்டு பயணிகளின் வருகையை அதிகரித்து, அவர்கள் மூலம் வருவாய் ஈட்டுவதற்கு ஆட்சியாளர்கள் முடிவு செய்துள்ளனர். அதன் ஒரு அம்சமாக இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ‘வருகை விசா’ வழங்கப்படுகிறது.
ஓராண்டுக்கு சோதனை அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும், குடிவரவு அமைச்சக செய்தியை மேற்கோள் காட்டி அரசின் குளோபல் நியூ லைட் நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
‘வருகை விசா’ பெற்றவர்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக தடைசெய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.