Home இந்தியா ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் விசாகப்பட்டினம்

ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் விசாகப்பட்டினம்

by Jey

முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் அமராவதியில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்கள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தசரா விழாக்கள் தொடங்கும் நேரத்தில் விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்றும் விசாகப்பட்டினம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையமாக மாற்றப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில், முதல்-மந்திரி ஜெகன் ரெட்டி, விஜயதசமிக்குள் விசாகப்பட்டினத்தில் இருந்து நிர்வாகத்தைத் தொடங்குவோம் என்றும், விசாகப்பட்டினத்தில் அலுவலகங்களைத் தேர்ந்தெடுக்க ஒரு குழுவை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

related posts