மானிடோபாவில் கொவிட் நான்காம் அலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மானிடோபாவில் அண்மைய நாட்களாக டெல்டா திரிபு வைரஸ் தொற்று பதிவாகி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வைரஸ் திரிபு பரவுகையினால் மீளவும் மானிடோவில் நோய்த் தொற்று உறுதியானர் எண்ணிக்கை அதிரிக்கக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி முதல் வரையில் பதிவான டெல்டா திரிபுடைய நோய்த் தொற்றாளிகள் எண்ணிக்கை 54 எனத் தெரிவிக்கப்படுகின்றது.
டெல்டா திரிபுடைய நோய்த் தொற்றாளர் எண்ணிக்கையின் சடுதியான உயர்வினை எதிர்பார்க்க முடியும் என வின்னிபிக்கில் தீவிர சிகிச்சைப் பிரிவின் மருத்துவர் டொக்டர் ஆனந்த் குமார் எதிர்வு கூறியுள்ளார்.
இந்த நோய்த் தொற்று வீரியமானது எனவும் வேகமாக பரவக்கூடியது எனவும் அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தக் கூடுடியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.