Home கனடா எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கவனம்

எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கவனம்

by Jey

கனடாவில் எல்லைக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கொவிட் நோய்த் தொற்று காவுகையை தடுத்து நிறுத்தும் நோக்கில் கனேடிய எல்லைப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி ஏற்றப்பட்டவர்கள் எல்லையை கடப்பதற்கு அனுமதிக்க முடியுமா என்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடே தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனேடியர்கள் பயணங்களை மேற்கொள்வதற்கு ஆவலாக இருப்பதாகவும், இரண்டு மருந்தளவு தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் வரையில் அவர்கள் பொறுமை காக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லைகள் குறித்த கெடுபிடிகளை எவ்வாறு தளர்த்துவது என்பது குறித்து தொடர்ந்தும் மாகாண அரசாங்கங்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

related posts