சீன புவி இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் “ஷி யான் 6” இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்கு அருகில் ஆராய்ச்சி அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச கடல் போக்குவரத்து கண்காணிப்பு தளங்கள் தெரிவிக்கின்றன.
இந்த கப்பல் நிகோபார் தீவுகளுக்கு அண்மையில் பயணித்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சீன புவி இயற்பியல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பல் ஷி யான் 6 மலாக்கா ஜலசந்தி வழியாக இந்தியப் பெருங்கடலில் நுழைந்து நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டது.
இலங்கை நோக்கி நேற்றைய தினம் (22.09.2023) பயணித்த கப்பல், பின்னர் வங்காள விரிகுடாவை நோக்கித் திரும்பி, இந்தியாவின் பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்திற்கு அருகில் அமைந்துள்ள நிக்கோபார் தீவுகளை நோக்கி பயணித்தது.
இக் கப்பலின் வழியைக் கண்காணித்தபோது, ஷி யான் 6 இந்தியப் பெருங்கடலின் தரையில் அமைந்துள்ள ஒரு பரிமாண அமைப்பான தொண்ணூறு கிழக்கு முகடு வழியாக நகர்வதைக் காண முடிந்தது.
கடந்த இரண்டு தசாப்தங்களில், இந்தியாவும் அமெரிக்காவும் தொண்ணூறு ஈஸ்ட் ரிட்ஜ் என்று அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பல ஆய்வுத் திட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது சீன கப்பல் அங்கு வந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.