Home இந்தியா நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறு – சோம்நாத்

நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறு – சோம்நாத்

by Jey

லேண்டர், ரோவரிடம் இருந்து இதுவரை எந்த தொடர்பும் இல்லை. ஆனால் அது வராது என்று என்னால் கூற முடியாது. முழு சந்திர நாள் வரையும் (14 பூமி நாட்கள்) நாம் காத்திருக்க வேண்டும். ஏனெனில் அந்த காலம் முழுவதும் சூரிய ஒளி தொடர்ந்து இருக்கும், அதாவது வெப்பநிலை மட்டுமே உயரும்.

வெப்பநிலை அதிகரிக்கும் வரை, உள்ளே உள்ள அமைப்புகள் வெப்பமடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே அமைப்புகள் 14 வது நாளில் கூட எழுந்திருக்கலாம். அது எப்போது நடக்கும் என்று கணிக்க வழி இல்லை, ஆனால் அது காலப்போக்கில் மாறக்கூடும் என்றார்.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்ட ரோவரின் பின்புற சக்கரங்களில் இந்திய தேசிய சின்னம் மற்றும் சந்திர மண்ணில் இஸ்ரோ லோகோ பொறிக்கப்பட்டுள்ளது. அந்த முத்திரைகள் ரோவர் ஆய்வில் தெளிவாக விழவில்லை.

இதற்கு மண்ணின் தன்மையே காரணம். நிலவின் மண் தூசிகளாக அல்லாமல் மிக இறுக்கமாக இருந்துள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்கின்றனர் விஞ்ஞானிகள்.

தென் துருவப் பகுதியில் உள்ள நிலவு மண்ணின் பண்புகள் பற்றிய புதிய புரிதல். தென் துருவப் பகுதியில் உள்ள மண்ணைப் பற்றிய புதிய தகவல்கள் என்பது பல எதிர்கால பயணங்களுக்கு இலக்காக உள்ளது.

நிலவில் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்யப்படும். இவ்வாறு சோம்நாத் கூறினார்.

related posts