தங்களுடைய இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்த நாளை இன்று கொண்டாடிய நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி .
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடந்தது.
இந்த நிலையில் எங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என கடந்த அக்டோபர் 9-ந்தேதி விக்னேஷ் சிவன் டுவிட்டர் பதிவில் வெளியிட்டார்.
குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயரிட்டு உள்ளோம் என விக்னேஷ் சிவன் முன்பே கூறினார்.
இதன்பின்னர், ஒரு விருது விழாவில் கலந்து கொண்ட நயன்தாரா உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என தன் இரண்டு மகன்களின் பெயர்களையும் வெளியிட்டார்.
வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பெற்றெடுத்த நடிகை நயன்தாரா திரைப்படங்களில் நடிப்பதோடு, குழந்தைகளை வளர்ப்பதிலும் அதிக அக்கறை எடுக்கிறார்.
படப்பிடிப்பு முடிந்ததும் உடனடியாக வீட்டுக்கு திரும்பி குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது, உடைகள் மாற்றுவது என்று அவர்களை பராமரிப்பதில் நேரம் செலவிட்டு வருகிறார்.