Home இந்தியா ஆவின் பால் பாக்கெட் விநியோகம் 50% குறைக்கப்பட்டுள்ளது – டி.டி.வி. தினகரன்

ஆவின் பால் பாக்கெட் விநியோகம் 50% குறைக்கப்பட்டுள்ளது – டி.டி.வி. தினகரன்

by Jey

பால் உற்பத்தியாளர்களுக்கும், பொதுமக்களுக்கும் இணைப்பு பாலமாக ஆவின் நிர்வாகம் செயல்படுவதை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

“தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிர்வாகம் மூலம் உற்பத்தி செய்யப்படும் பச்சை நிற பால் பாக்கெட்டுகளின் விநியோகம் எவ்வித முன்னறிவிப்புமின்றி
50 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது.

ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பச்சை நிற பாக்கெட்டுகள் விநியோகம் குறைக்கப்பட்டு அதற்கு மாறாக கொழுப்புச் சத்து குறைந்த ஊதா நிற பால் பாக்கெட்டுகள் அதிகளவு விநியோகம் செய்யப்படுவதாக நாளிதழ்களில் செய்தி வெளியாகியுள்ளது.

related posts