ஹமாஸ் தரப்பினரால் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தங்களது தரப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேநேரம் ஹமாஸ் தரப்பினருக்கு எதிரான தாக்குதலுக்கு தயாராகும் வகையில் காஸா பகுதியில் உள்ள குடியிருப்பாளர்களை தங்களது வீடுகளை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் இராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
பாலஸ்தீன ஆயுததாரிகளுக்கு இது ‘கருப்பு நாள்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனிய ஆயுதக் குழுவான ஹமாஸ், பாரியளவான ஏவுகணை தாக்குதல்களை நேற்று நடத்தியது. இந்த தாக்குதல்களில் இஸ்ரேலில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் பணயக் கைதிகளாக வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தெற்கு நகரான ஒபாகிமில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த தங்களது தரப்பினர் மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
அதேநேரம் இஸ்ரேல், காசா மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதன்போது காசா பகுதியிலுள்ள 230 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன் அறிவித்துள்ளது.