சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3-வது நாள் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தப்போது அவர் கூறியதாவது:-
கொடநாடு வழக்கு சிபிசிஐடியின் கீழ் இருப்பது அனைவருக்கும் தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் சிபிசிஐடிக்கு உத்தரவிட்டோம்.
கொடநாடு வழக்கை சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
விசாரணையின் முன்னேற்றம் குறித்தும் தற்போதைய நிலவரம் குறித்தும் விரைவில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.