Home இலங்கை இலங்கை ரூபாவின் பெறுமதி 12.1 வீதத்தால் அதிகரிப்பு

இலங்கை ரூபாவின் பெறுமதி 12.1 வீதத்தால் அதிகரிப்பு

by Jey

2023 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 12.1 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஒக்டோபர் மாதம் 13ஆம் திகதி வரையான வருடத்தில் ஏனைய நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சிறப்பாகச் செயற்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் யென்னுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு 26.7 சதவீதமும், ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக 10.7 சதவீதமும், யூரோவுக்கு எதிராக 13.4 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 12.8 சதவீதமும் உயர்ந்துள்ளது.

 

 

 

 

related posts