Microsoft நிறுவனத்தின் LinkedIn தளத்தில், 668 ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல், திறனாளர் சேர்ப்பு, நிதிப் பிரிவுகளில் உள்ள ஊழியர்கள் அவர்கள். அதேவேளை இவ்வாண்டு இரண்டாம் முறையாக LinkedIn தளம், ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்கிற நிலையில், குறைந்த வருவாய் வளர்ச்சியே அதற்குக் காரணம் எனவும் கூறப்படுகின்றது.
20,000 ஊழியர்கள் பணிபுரியும் நிறுவனத்தில் 3 விழுக்காட்டு ஊழியர்களை இந்த நடவடிக்கை பாதிக்கும்.
இவ்வாண்டின் முற்பாதியில் தொழில்நுட்ப நிறுவனங்களில் 141,516 ஊழியர்கள் வேலை இழந்ததுடன், சென்ற ஆண்டு அந்த எண்ணிக்கை சுமார் ஆறாயிரமாக இருந்ததாகவும் கூறப்படுகின்றது.