10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த 15-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொண்டது.
இந்த ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் 69 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முஜீப், ரஷீத் கான், முகமது நபி ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சால் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வி அடைந்தது.
இந்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்ற பின்னர் பவுண்டரி எல்லையிலிருந்து பந்தை எடுத்துப் போடும் சிறுவர்களில் ஒரு பையன் முஜீப் உர் ரகுமானை கட்டிப்பிடித்து தேம்பித் தேம்பி அழுதார்.
மேலும் அந்த சிறுவனுக்கு சாக்லேட்டை பரிசளித்து தண்ணீர் குடிக்க வைத்து முஜீப் அழுகையை நிறுத்தி அன்பை காட்டியது சமூக வலைதளங்களில் வைரலானது.