சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டிருந்த கனடா விமானத்தைச் சீனா ஆபத்தான முறையில் இடைமறித்ததைக் கனடா கண்டித்துள்ளது. சீனாவின் கரை ஓரத்துக்கு அப்பால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கனடாவின் விமானத்தை சீனப் போர்விமானம் சில மணி நேரம் பின்தொடர்ந்து ஒரு கட்டத்தில் 5 மீட்டர்வரை நெருக்கமாக வந்ததாகக் கூறப்படுகிறது.
வட கொரியாவுக்கு எதிரான ஐக்கிய நாட்டுத் தடையை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையில் கனடிய விமானம் ஈடுபட்டிருந்தது.
அதேவேளை கனடாவின் தேர்தலில் சீனா குறுக்கிட்டதாகக் கூறி மே மாதம் சீன அரசதந்திரியைக் கனடா வெளியேற்றிய நிலையில், கனடாவுக்கும் சீனாவுக்கும் இடையே உறவு மோசமாக உள்ளது.