கென்யாவில் பெண்கள் மாத்திரமே வாழ்ந்து வரும் கிராமம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கென்யாவின் நைரோபியில் இருந்து சுமார் 350 கிலோமீற்றர் தொலைவில் உள்ள உமோஜா என்ற கிராமத்திலேயே இவ்வாறு பெண்கள் மாத்திரம் வாழ்ந்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாது அந்த கிராமத்தில் ஆண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கு வாழக்கூடிய பெண்கள் அனைவரும் சம்பூர் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இங்கு 40 குடும்பங்கள் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவான நிலையில் கடந்த 1990 ஆம் ஆண்டுகளில் சம்பூர் இனத்தை சேர்ந்த பெண்களைப் பிரித்தானிய இராணுவ வீரர்கள் பாலியல் பலாத்காரம் செய்ததனால் அப் பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஆவேசம் அடைந்த ஒரு பெண் 15 பெண்களை இணைத்துக் கொண்டு அந்த கிராமத்தை உருவாக்கியதாகவும் கூறப்படுகின்றது.