கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னை மந்தைவெளி பகுதியில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 5,200 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் மேலும் ஆயிரம் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் டெங்கு பாதிப்பு குறையத் தொடங்கும்” என்று தெரிவித்தார்.