திருச்சியில் உள்ள தனியார் ஐ.ஏ.எஸ். பயிற்சி நிறுவனத்தில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய கவர்னர் ஆர்.என்.ரவி, பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள்.
பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட ராபர்ட் கால்டுவெல் தான் திராவிடம் என்றும் பிரித்துக்கூறியவர்.
இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பிவைக்கப்பட்டனர்.
தமிழ்நாடு புண்ணிய பூமி; இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள்’ என்றார்.