பலஸ்தீனத்திற்கு ஆதரவான போராட்டத்திற்கு ரொறன்ரோ முதல்வர் ஒலிவியா சொள கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ரொறன்ரோவில் அமைந்துள்ள யூத மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபருக்குச் சொந்தமான வர்த்தக நிலையத்திற்கு எதிரில் நூற்றுக் கணக்கானவர்கள் கூடி எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
வர்த்தக நிலையங்கள் மீது இவ்வாறு எதிர்ப்பை வெளியிடுவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைய பிரச்சினைகள் மன வேதனையை அளித்தாலும் அடிப்படை மனிதாபிமான சட்டங்கள் மதித்து அனைவரும் செயற்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நகரில் இடம்பெற்று வரும் வெறுப்புணர்வு குற்றச் செயல்களை ஒலிவியா சொள கண்டித்துள்ளார்.