ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று அதிகாலை 1.09 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இது ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கம் 150 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.
இந்நிலையில், இந்த மாதத்தில் 4-வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.