Home இந்தியா தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல்

தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல்

by Jey

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில், காவிரி நதி நீரை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகிர்ந்துகொள்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தையும், ஒழுங்காற்று குழுவையும் மத்திய அரசு அமைத்தது.

இந்த இரு அமைப்புகளுக்கும் தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களும் தங்கள் பிரதிநிதிகளை நியமித்து உள்ளன.

இதற்கிடையில், காவிரி ஒழுங்காற்று குழுவின் 89-வது கூட்டம் டெல்லியில் காணொளி வாயிலாக நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், கர்நாடகா தரப்பு அதிகாரிகள் கூறும்போது, கர்நாடகாவில் தற்போது மழை இல்லாததன் காரணமாக, நீர்நிலைகளில் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதுடன்,

குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி, தமிழகத்திற்கு குறிப்பிட்ட அளவு நீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

related posts