கொழும்பில் மின் கட்டண அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளது.
அத்துடன், எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – திவுலப்பிட்டி பிரதான வீதி ஹொரகஸ்முல்ல பிரதேசத்தில் முற்றாக தடைப்பட்டுள்ளது.
மேலும், இதன்போது மின்சார நுகர்வோர் சங்கத்தின் செயலாளர் மற்றும் பௌத்த பிக்கு உட்பட 6 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.