Home உலகம் அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து

by Jey

அமெரிக்காவில் 24 வயதான வருண் என்ற இந்திய மாணவர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள வால்பரைசோ நகரில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் வருண் கத்தியால் தாக்கப்பட்டார்.

இந்நிலையில் இந்திய மாணவரை கத்தியால் குத்திய ஜோர்டான் ஆண்ட்ராட்(24) என்ற அமெரிக்க வாலிபரை பொலிசார் கைது செய்தனர்.

வருண் உடல்நிலை மோசம்
வருண் உடல்நிலை குறித்து வெளியான தகவலில் ,

கத்திக் குத்தால் காயமடைந்த வருண் போர் வெய்ன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காயத்தை பார்க்கும் போது, அவர் உயிர் பிழைப்பதற்கு 5 சதவீதமே வாய்ப்பு உள்ளது.

அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகின்றது. ஜோர்டான் ஆண்ட்ராட் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், மசாஜ் செய்ய வேண்டி அங்கு வந்தேன்.

யாரும் இல்லாததால் மற்றொரு அறைக்கு சென்றேன். அங்கிருந்த வருணை பார்த்த போது, வித்தியாசமாக தெரிந்தார்.

அவரால் அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கருதி, அவரை கத்தியால் குத்தினேன் எனக் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts