இந்தோனேசியா – திமோர் தீவில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று (02.11.2023) காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் சிறிதளவில் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
குறித்த நிலநடுக்கம் சுமார் 22.4 மைல் தொலைவில் நிலத்திற்கு அடியில் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மக்கள் பீதியடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.