Home கனடா ஆளுனர் நாயகம் பதவிக்கான பெயர் பரிந்துரைகள் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது

ஆளுனர் நாயகம் பதவிக்கான பெயர் பரிந்துரைகள் பிரதமரிடம் வழங்கப்பட உள்ளது

by Jey

ஆளுனர் நாயகம் பதவிக்கான பெயர் பரிந்துரைகள் பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடேவிடம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உள்விவகார அமைச்சர் டொமினிக் லிபிலான்க் தெரிவித்துள்ளார்.

ஆளுனர் நாயகம் பதவிக்கு தகுதியான சிலரின் பெயர்கள் அடங்கிய பரிந்துரைப் பட்டியல் தயாரிக்கப்படுவதாகவும் விரையில் இந்தப் பட்டியல் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆறு பேர் அடங்கிய குழுவொன்றினால் தகுதியான நபர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஆளுனர் நாயகமாக கடமையாற்றி வந்த ஜூலி பயெட்டே கடந்த ஜனவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தது முதல் இதுவரையில் அந்த வெற்றிடம் நிரப்பப்படவில்லை.

ஆளுனர் நாயகம் பதவியின் பொறுப்புக்களை பிரதம நீதியரசர் ரிச்சர்ட் வெங்கர் தற்காலிக அடிப்படையில் தற்பொழுது முன்னெடுத்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts