இலங்கையில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் வங்கிக் கடன்களை வழங்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கு வங்கிக் கடன் சலுகைகளை வழங்க உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு – தாமரை தடாக அரங்கில் நேற்று (01) நடைபெற்ற 2023ம் ஆண்டுக்கான தேசிய கைத்தொழில் சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், நாடு கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடிகள் மீண்டும் ஏற்படாதவாறு தவிர்த்துக் கொள்வதே தனது முதல் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.