ஈரான் நாட்டில் அபாயகரமான விகிதத்தில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவதாகவும், நடப்பு ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் குறைந்தது 419 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் ஐநா பொதுச் செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
சிறிய தவறுகளுக்கும் பெரிய தண்டனைகளைக் கொடுக்கக்கூடியவையாக அரபு நாடுகள் உள்ளன. ஈரானில், 22 வயது மாஷா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டின் இஸ்லாமிய ஆடைக் குறியீட்டை மீறியதாகக் கூறப்படும் தலைக்கவசத்தைத் தளர்த்தியதற்காக காவலர்களால் கைது செய்யப்பட்டார்.
அவரது மரணம் அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. நாடு தழுவிய போராட்டங்கள் நடைபெற்றன.
அதில் பங்கேற்றதற்காக ஏழு பேர் தூக்கிலிடப்பட்டதாக ஐ.நா பொதுச் செயலாளரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.