Home இலங்கை நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரிப்பு

by Jey

நாட்டில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

ஜனவரி மாதம் முதல் நவம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 68,497 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த சில மாதங்களில் மாத்திரம் டெங்கு நோயினால் 32 மரணங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கமைய மேல் மாகாணத்தில் அதிகளவாக 32,862 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் மத்திய மாகாணத்தில் 7,878 பேரும், வடமேல் மாகாணத்தில் 5,671 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,651 பேரும் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

related posts