மியன்மாரில் இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று மாலையில் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது இருந்து சுமார் 300 மீட்டர் (984 அடி) தூரத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் ஆறு ராணுவ வீரர்களையும், மதத் துறவிகளையும் ஒரு புதிய மடாலயத்திற்கு அடித்தளம் அமைக்கும் விழாவிற்காக அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் விபத்தில் சிக்குண்ட விமானி ஒருவரும் பயணி ஒருவரும் தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.