கொழும்பு துறைமுகத்தில் ஆழ்கடல் கப்பல் கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் டொலர்களை கடனாக வழங்கவுள்ளதாக ஐக்கிய அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
உயர்தர உள்கட்டமைப்புக்கான நிதியுதவியை இந்த புதிய முனையத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
பரந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கடல்சார் திறனை விரிவுபடுத்துவதாகவும், இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகவும், இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதாகவும் தூதரகம் முன்வந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில், கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள ஆழ்கடல் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு கொழும்பு வெஸ்ட் இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு 553 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்படும்.
மேலும், குறித்த நிதியுதவியை வழங்குவதற்காக அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் கார்ப்பரேஷன் (யு.எஸ். இன்டர்நேஷனல் டெவலப்மென்ட் ஃபினான்ஸ் கார்ப்பரேஷன்) நிர்வாக அதிகாரி ஸ்காட் நாதன் மற்றும் குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.