சிரியாவில் உள்ள ஈரான் இராணுவம் மற்றும் ஈரான் சார்பு குழுவொன்றின் ஆயுதக்கிடங்கின் மீது தாக்குதல் நடத்ததிதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
ஆயுதக்கிடங்கின் மீது இரண்டு எவ்15 போர் விமானங்களை பயன்படுத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஒஸ்டின் லொயிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதலிற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர்,
ஈரான் ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் தொடர்ந்தால் , நாங்கள் மேலதிக நடவடிக்கை எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தாக்குதலில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு குழுவை சேர்ந்த 9 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சிரியாவின் மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.