இஸ்ரேல் – ஹமாஸ் போர் உக்கிரமடைந்த வரும் நிலையில், காஸா வைத்தியசாலைகளை பாதுகாத்தல் கட்டாயமாக்கப்படல் வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் குறித்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே ஜோ பைடன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வைத்தியசாலைகளை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு.
நாங்கள் இஸ்ரேலுடன் தொடர்பில் இருக்கிறோம். பிணைக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காஸாவில் உள்ள வைத்தியசாலைகளை கட்டாயமாக பாதுகாக்கப்பட வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
காஸாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிபாவில் நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், அல்-ஷிபா வைத்தியசாலை இஸ்ரேல் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.