கனடாவில் வீட்டு வாடகைத் தொகை ஓராண்டு காலப் பகுதிக்குள் 9.9 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது.
கடந்த ஒக்ரோபர் மாதம் மாதாந்த சராசரி வாடகைத் தொகை 2178 டொலர்களாக பதிவாகியுள்ளது.
Rentals.ca and Urbanation ஆகிய நிறுவனங்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இது ஓராண்டு காலப் பகுதிக்குள் 9.9 வீத அதிகரிப்பினை பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆறு மாத காலமாகவே நாட்டில் வாடகைத் தொகை அதிகரிப்பு தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளது.