Home உலகம் காசாவில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் மருத்துவர்

காசாவில் 20 உறவினர்களை இழந்து தவிக்கும் மருத்துவர்

by Jey

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையேயான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த போரில் இதுவரை 11 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 2,700 பேர் காணாமல் போயுள்ளதாகவும் மேலும் இஸ்ரேலில் 1,200 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போரில், 47 வயதான மருத்துவர் எமத் ஷெஹாடா என்பவர் அதிகம் பாதிப்படைந்துள்ளார்.

குவைத்தில் பிறந்து சிரியாவில் வசித்து வந்த அவர், பின்னர் 20 வருடங்களுக்கு முன் அமெரிக்காவுக்கு சென்றார். டெட்ராய்ட் நகரில் படித்த அவர் அமெரிக்காவிலேயே தொடர்ந்து வசித்து வருகிறார்.

இந்நிலையில், தொடர்ந்து வரும் போர் பற்றி ஷெஹாடா கூறும்போது,

காசாவில் வசித்து வரும் என்னுடைய சகோதரிக்கு அடுத்துள்ள வீட்டில் என்னுடைய உறவினர்கள் 12 பேர் வசித்து வந்தனர்.

அந்த வீடு மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வீடு என்னுடைய சகோதரியின் வீட்டில் இருந்து 32 அடி தொலைவிலேயே இருந்தது.

குறித்த ஏவுகணை தாக்குதலில், உறவினரான முகமது கிரெய்ஸ், முகமதுவின் 3 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியாக இருந்த மயார் (வயது 19) ஆகியோரும் உயிரிழந்துள்ளனர் என கூறியுள்ளார்.

ஒவ்வொரு முறை தொலைபேசி அழைப்பு மணி அடிக்கும்போதும், காசாவில் யாரையேனும் பற்றிய கெட்ட செய்தியாக இருக்குமோ என்ற வருத்தம் வருகிறது என்றும் மருத்துவர் எமத் ஷெஹாடா கூறுகிறார்.

related posts