இஸ்ரேல் இருந்து காசாவுக்கு பிடித்து செல்லப்பட்ட பணய கைதிகளை விடுவிக்க கோரி அமெரிக்காவில் பாரிய ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவின் வொஷிங்டனில் இடம்பெற்ற பேரணியில் 2.9 இலட்சம் பேர் கலந்துகொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பேரணிக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கான துறை தெரிவிக்கின்றன.
இஸ்ரேலில் இருந்து காசாவுக்கு பணயக் கைதிகளாக பிடித்து செல்லப்பட்டுள்ளவர்களை மீட்கும் தீவிர பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படை ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில் பணய கைதிகளை விடுவிக்க கோரி, அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி.யில் 2.9 இலட்சம் பேர் பேரணியாக சென்றனர்.
இதன்போது, இஸ்ரேல் ஜனாதிபதி இசாக் ஹெர்ஸாக் நேரலையில் திரளான கூட்டத்தினரிடம் உரையாற்றினார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டு உள்ள குழந்தைகள், சிறுவர்கள், ஆடவர் மற்றும் மகளிருக்காக பேரணி நடத்த இவர்கள் ஒன்றிணைந்துள்ளனர்.