Home கனடா காசா பிராந்தியத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை அனுமதிக்க முடியாது

காசா பிராந்தியத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை அனுமதிக்க முடியாது

by Jey

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ காசா பிராந்தியத்தில் இடம் பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் டுவிட்டர் ஊடாக கருத்துக்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

காசா பிராந்தியத்தில் பொதுமக்கள் கொல்லப்படுவதனை அனுமதிக்க முடியாது என கனேடிய பிரதமர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பெண்கள், சிறுவர்கள், சிசுக்கள் போன்றோர் படுகொலை செய்யப்படுவது கவலை அளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் படுகொலை செய்வதனை தவிர்க்குட’ வகையில் இஸ்ரேலிய அரசாங்கம் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக அல் ஷிபா வைத்தியசாலையில் இடம்பெற்று வரும் சம்பவங்கள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இஸ்ரேலிய படையினர் திட்டமிட்டு பொதுமக்களை தாக்கவில்லை என அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகூ தெரிவித்துள்ளார்.

நேரடியாக கனேடிய பிரதமருக்கு பதில் அளிக்கும் வகையில் அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

இஸ்ரேலிய படையினர் காசாவில் வாழும் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்களை இலக்கு வைத்து போர் குற்ற செயல்களில் ஈடுபடும் ஹமாஸ் இயக்கத்தையே தண்டிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

 

related posts