ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தெரிவாகியதையடுத்து இந்திய விமானப்படையின் சூர்ய கிரண் அணியினர் வான்வழி காட்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இறுதிப் போட்டி நடைபெறும் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்திற்கு மேலே இந்த விமானக் காட்சிகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான கண்காட்சியின் ஒத்திகையை நேற்றும் (17) இன்றும் நடத்த இந்திய விமானப்படை தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், இந்திய அணிக்கும், அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டி எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.