Home இலங்கை வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடல் தொழில்சார் அபிவிருத்தி

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடல் தொழில்சார் அபிவிருத்தி

by Jey

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் கடல் தொழில்சார் அபிவிருத்திகளுக்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளதுடன், இது தொடர்பான ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது வடக்கு-கிழக்கு கடல் தொழில் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இதற்கமைய வடக்கு-கிழக்கில் கடற்றொழில் துறையை அபிவிருத்தி செய்வதற்காக ஜப்பான் அரசாங்கம் 03 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.

இந்த நிதி கடல் தொழிலாளர்களுக்கான குளிரூட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் நவீன உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் என்பவற்றிற்காக பயன்படுத்தப்படவுள்ளது.

 

related posts