Home உலகம் கிரீஸ் நாட்டில் கடும் புயலில் சிக்கிய சரக்கு கப்பல்

கிரீஸ் நாட்டில் கடும் புயலில் சிக்கிய சரக்கு கப்பல்

by Jey

கிரீஸ் நாட்டில் கடும் புயலில் சிக்கி சரக்கு கப்பல் ஒன்று கடலில் கவிழ்ந்தாக தெரியவந்துள்ளது கிரீஸ் நாட்டில் அலெக்சாண்ட்ரியா துறைமுகத்தில் இருந்து இஸ்தான் புல்லுக்கு 6 ஆயிரம் டன் உப்புகளை ஏற்றிக்கொண்டு ஒரு சரக்கு கப்பல் சென்று கொண்டிருந்தது.

லெஸ்போஸ் தீவு அருகே கப்பல் சென்று கொண்டிருந்த போது அதன் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

கடும் புயலில் சிக்கி அந்த கப்பல் கடலில் கவிழ்ந்ததில் கப்பலில் 8 எகிப்தியர்கள், 4 இந்தியர்கள், 2 சீரியாவைச் சேர்ந்தவர் என 14 பேர் இருந்தனர்.

இதில் எகிப்து நாட்டை சேர்ந்த ஒருவர் மட்டும் உயிர் தப்பிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. உயிரிழந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர் என இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மாயமான 12 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இந்த பணியில் கிரீஸ் நாட்டு கடலோர காவல் படையினர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் ஹெலிகாப்டர்கள் மற்றும் கப்பல்களும் தேடிவருவதுடன் , கப்பல் கவிழ்ந்ததில் அதில் இருந்த 6 ஆயிரம் டன் உப்பு கடலில் கரைந்ததாகவும் கூறப்படுகின்றது.

related posts