இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 154 கோடியே 70 இலட்சம் அமெரிக்க டொலர்கள், வெளிநாட்டு நேரடி முதலீடாக கிடைக்கப்பெற்றுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.
இதுதவிர உள்நாட்டு முதலீட்டாளர்கள் குறித்த காலப்பகுதியில், 25 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளனர்.
அத்துடன், கடந்த வருடத்தில் நாட்டில் பல பாதகமான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வமாக இருப்பதனை குறித்த புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்