இந்தியாவில் இடி, மின்னல் மற்றும் கனமழையுடன் கூடிய ஆலங்கட்டி மழை காரணமாக குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த கனமழையால் மேற்கு குஜராத் முழுவதும் வீடுகள் சேதமடைந்துள்ளன மற்றும் விலங்கு பண்ணைகளில் விலங்குகள் கூட உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் குளிர்காலத்தில் குஜராத்தில் இது போன்ற புயல்கள் அசாதாரணமானது.
மேலும் வானிலை ஆய்வாளர்களின் கூற்றுப்படி, அதிக மழைப்பொழிவு பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில், மேற்கு இந்தியாவில் பல நாட்களுக்கு மழை மற்றும் ஆலங்கட்டி மழை தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
எனினும், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மக்கள் திடீர் வெள்ளம் மற்றும் மின்னல் காரணமாக உயிரிழக்கின்றனர்.
அதன்படி, இதுவரை ஏற்பட்ட 24 உயிரிழப்புகளில் 18 இடி, மின்னல் தாக்கத்தால் ஏற்பட்டவை என்று தெரிவிக்கப்படுகிறது.
குஜராத்தில், சில பகுதிகளில் 24 மணி நேரத்தில் 144 மிமீ வரை இடியுடன் கூடிய மழையும் ஆலங்கட்டி மழையும் பெய்தமை குறிப்பிடத்தக்கது.