இஸ்ரேலில் வேலைவாய்ப்பு தொடர்பில் இஸ்ரேலிய அரசாங்க அதிகாரிகளால் இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலில் பணி புரிவதற்காக இலங்கையில் இருந்து பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடைமுறையில் எந்த விதமான மோசடிகளும் இடம்பெறக்கூடாது என இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இடைத்தரகர்களால் அதிகளவு கட்டணம் பெறப்படுவதாக வெளியான செய்திகளுக்குப் பதிலளிக்கும் விதமாகவே இந்த எச்சரிக்கையை இஸ்ரேல் விடுத்துள்ளது.