அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அதி தீவிர வானிலை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரை பகுதியில் நேற்றைய தினம் காலை 9 மணி முதல் 339 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
இதன் காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தின் பல நகரங்கள் வெள்ள நீரில் முழ்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.