இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எலுமிச்சை பழத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்தே அதன் விலை அதிகரித்துள்ளது.
சில இடங்களில் சாதாரண தரமான எலுமிச்சை பழம் ஒன்று நூறு ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கொழும்பில் எப்போதுமே பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் வெள்ளவத்தையில் எலுமிச்சையின் விலை கட்டுப்பாடின்றி விற்பனை செய்யப்படுகிறது.