Home இந்தியா தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு

தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு

by Jey

காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய அணைகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து மாநில விவசாயிகள் இன்று 88-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தினர்.
காவிரி பிரச்சனையில் பிரதமர் மோடி மௌனம் காக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தே இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடுவர் மன்ற இறுதி உத்தரவும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது
அத்துடன் இந்த இறுதி உத்தரவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றமும்; தீர்ப்பை வழங்கியுள்ளது.
எனினும் கர்நாடக விவசாயிகள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
காவிரியின் குறுக்கே கட்டப்பட்ட அணைகளில் இருந்து தமிழ் நாட்டுக்கு நீரை திறக்கவே கூடாது என்று அவர்கள் கோரி வருகின்றனர்

related posts