மலேசியாவுக்கு செல்லும் இந்தியர்களுக்கு இன்று முதல் விசா அவசியம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இதன்படி இந்தியர்கள் மலேசியாவில் 30 நாட்கள் வரை தங்கி சுற்றிபார்க்க முடியும்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இந்த வசதியை மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராகிம் கடந்த நவம்பர் 26ம் திகதி அறிவித்தார்.
மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் வேலை, வர்த்தகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் பல ஆண்டுகளாக தொடர்புகள் உள்ளன.
இந்தநிலையில் மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் எண்ணிக்கை, சுமார் 27 லட்சம் ஆகும். இது மலேசிய மக்கள் தொகையில் சுமார் 9வீதமாகும் என்ற கணிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 80 சதவீதம் பேர் தமிழர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுதவிர இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் மலேசியாவில் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.