Home கனடா கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கையில் மீண்டும் அதிகரிப்பு

by Jey

கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை மீளவும் அதிகரித்துள்ளது.
கனடாவின் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த மாதம் 5.8 வீதமாக காணப்பட்டது.

நாட்டில் சனத்தொகை வளர்ச்சி வேகம் மற்றும் வட்டி வீத அதிகரிப்பு போன்ற ஏதுக்களினால் வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நவம்பர் மாத வேலை வாய்ப்பு தொடர்பான தகவல்கள் கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25000 தொழில் வாய்ப்புக்கள் பொருளாதாரத்தில் சேர்க்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

உற்பத்தி மற்றும் கட்டுமானதுறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, நிதி, காப்புறுதி மற்றும் வீட்டுமனை, குத்தகை போன்ற துறைகளில் வேலை வாய்ப்புக்கள் குறைவடைந்துள்ளன.

related posts